advertisement

மும்பை சென்ற விஜய்

மார். 20, 2026 4:07 பிற்பகல் |

 

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதே சமயம் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை பிரச்சினை காரணமாக இன்னும் திரைக்கு வர முடியாத சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே, 'ஜனநாயகன்' பட வெளியீட்டிற்கு தணிக்கைக் குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ‘ஜனநாயகன்’ படம் விரைவில் திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருப்பினும் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், அரசியல் கட்சி தலைவராக இருப்பவர் நடித்துள்ள படம் திரையரங்குகளில் வெளியிடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் மும்பைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு இரவு 7 மணிக்கு தனி விமானம் மூலம் அவர் மும்பை புறப்பட்டு சென்றுள்ளார். ‘ஜனநாயகன்’ திரைப்படம் சம்பந்தமாக விஜய் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், விஜய் மும்பை சென்ற பிறகு இது தொடர்பான முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement