advertisement

அனைத்து மாநில முதல்அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

மார். 27, 2026 3:34 முற்பகல் |

 

ஈரான் மீதான போரின் காரணமாக உலக நாடுகள் எரிபொருள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. ஆனால் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பு நாடுகளுடனும் நட்புறவை சிறந்த முறையில் பேணி வருவதால் இந்தியா அந்த நெருக்கடியில் இருந்து ஓரளவு தப்பி வருகிறது.

இந்தநிலையில், பிரதமரின் வெளியுறவு நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் மோடி 2 நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுபற்றி பேசினார். எரிபொருள் வினியோகம் எந்த அளவில் இருக்கிறது, வெளியுறவு பேச்சுவார்த்தைகள் எப்படி நடந்துள்ளன? என்பது பற்றி அவர் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்அமைச்சர்களுடனும் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடுகிறார். மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் மாநிலங்கள் செய்திருக்கும் தயார்நிலைகள் மற்றும் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து அவர் ஆய்வு நடத்துவார் என கூறப்படுகிறது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement