advertisement

விஜய்யுடன் கூட்டணி வைத்தால் எதிர்மறை விளைவுகள்: அமித்ஷா கருத்து

மார். 28, 2026 4:34 முற்பகல் |


 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அதில் அமித்ஷா கூறியதாவது: விஜய் கட்சியுடன் நாங்கள் எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை.

இந்த கூட்டணிக்கு நாங்கள் முயற்சி செய்யவில்லை. ஏனென்றால் அவர் கூட்டணிக்கு வந்தால் எங்களின் வாக்கு வங்கியில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம்” என்றார். விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கடந்த சில நாட்கள் முன்பு வரை தகவல் பரவிய நிலையில் இதனை அமித்ஷாவே தற்போது மறுத்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement