advertisement

மே.வங்காளத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கிறது

மே 04, 2026 7:19 முற்பகல் |


 

மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக வந்திருந்ததால் தேர்தல் முடிவு குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த கருத்துக் கணிப்புகளை உறுதி செய்யும் வகையில் முன்னிலை நிலவரங்கள் மம்தா பானர்ஜிக்கு எதிராகவே இருக்கின்றன.

காலை 11 மணி நிலவரப்படி மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிக இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 148 இடங்கள் தேவை என்ற நிலையில், அதையும் தாண்டி 186 தொகுதிகளில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். குறிப்பாக தொழில்துறை மண்டலத்தில் பாஜக அதிக அளவிலான தொகுதிகளில் முன்னிலையைப் பெற்றுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் 105 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இடதுசாரி கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக மக்களின் மனநிலை இருப்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement