advertisement

வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளிநீதிமன்றத்தில் ஆஜர்

மே 05, 2026 7:14 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான தர்ம முனீஸ்வரன் இன்று பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வேடநத்தத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த சில காலத்திற்கு முன்பு கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சிறையில் இருந்த தர்ம முனீஸ்வரனை விசாரணைக்காக போலீசார் இன்று தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். நீதிபதி முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement