advertisement

விஜய்யின் வெற்றியை கொண்டாடும் குடும்பத்தினர்

மே 04, 2026 7:26 முற்பகல் |

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் கள நிலவரங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திமுக, அதிமுக கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர்பாராத வகையில் முன்னிலை வகித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி, தவெக 112 இடங்களிலும், அதிமுக 65 இடங்களிலும், திமுக 57 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கையில் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் அவரது குடும்பத்தினர் அதனைக் கொண்டாடும் வீடியோ வெளியாகி உள்ளது.

அதில், விஜய் குடும்பத்தினர் அவரது தந்தையை கட்டிப்பிடித்து கொண்டாடி வருகின்றனர். குடும்பமாக ஷோபாவில் அமர்ந்து கொண்டு தவெக சின்னமான விசிலை ஊதி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement