advertisement

திருவொற்றியூரில் மூதாட்டியிடம் ரூ.500 ‘டம்மி’ நோட்டை கொடுத்து ஏமாற்றியவர் கைது

மே 03, 2026 2:24 பிற்பகல் |


 
சென்னை: திருவொற்றியூர் மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்யும் மூதாட்டியிடம், சிறுவர்கள் விளையாடும் ரூ.500 டம்மி நோட்டைக் கொடுத்து ஏமாற்றி, பழம் வாங்கிச் சென்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (66) என்ற மூதாட்டி, சென்னை, திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் பழம் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 29ம் தேதி, அவரிடம் ஒரு பெண் ரூ.200க்கு மாம்பழம் வாங்கிக் கொண்டு ரூ.500 நோட்டை கொடுத்தார். அதனை உண்மை என நம்பிய மூதாட்டி, மீதம் ரூ.300-ஐ திருப்பிக் கொடுத்துள்ளார். பெண் சென்ற பிறகு நோட்டைச் சோதிந்த போது, அது சிறுவர்கள் விளையாடும் டம்மி ரூபாய் நோட்டு என்பது தெரியவந்தது

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மூதாட்டி கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து, திருவொற்றியூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, மூதாட்டியை ஏமாற்றிய எரணாவூரைச் சேர்ந்த பாக்கிய லட்சுமி (35) என்பவரை நேற்று கைது செய்தனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement