பெண்களுக்கு கண்ணியமான மறுவாழ்வும் உறுதி செய்ய வேண்டும்!- டெல்லி மாநாட்டில் அமைச்சர் ஜெகதீஸ்வரி வலியுறுத்தல்
டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மாநாட்டில், ஒருங்கிணைந்த சேவை மையங்கள் (OSC) மற்றும் சக்தி இல்லங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி உரையாற்றினார். அவர் பேசியதாவது :
பெண்களின் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுக்காக செயல்பட்டு வருன் மையங்கள், தேவைப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் சரியான நேரத்தில் சரியான உதவியை வழங்கும் வகையில் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவ உதவி, காவல்துறை உதவி, சட்ட உதவி, ஆலோசனை மற்றும் தற்காலிக தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஒருங்கிணைந்த முறையில் கிடைக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட பிரச்சினை மற்றும் தேவைக்கு ஏற்ப அவர்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்கி, அவர்களின் வழக்குகளை கண்காணிக்க வேண்டும்.
குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பெண்களுக்கும் இந்த சேவைகள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், பெண்களுக்கு தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு வழங்குவது மட்டுமே போதாது என்றும், அவர்கள் மீண்டும் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை தொடங்குவதற்குத் தேவையான தொழில்திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு, வாழ்வாதார உதவி மற்றும் தேவையான இடங்களில் மனநல ஆதரவும் வழங்கப்பட வேண்டும்.
ஒரு பெண் வன்முறையிலிருந்து பாதுகாப்பிற்கும், பாதுகாப்பிலிருந்து கண்ணியமான வாழ்க்கைக்கும், அங்கிருந்து மறுவாழ்வுக்கும் செல்லும் வகையில் OSC மற்றும் சக்தி இல்லங்கள் முழுமையான ஆதரவு அமைப்பாக செயல்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி பேசினார்.





கருத்துக்கள்