தூத்துக்குடி சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்
அக். 26, 2026 4:36 முற்பகல் |
தூத்துக்குடி ம் சிவன் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு சங்கரராமேஸ்வரருக்கு கும்ப பூஜை 10 மணிக்கு 21 வகையான அபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் மாலை 4 மணி முதல் சங்கரராமேஸ்வரர் அண்ணாபிஷேகம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அதன் பின் அலங்கார தீபாரனை நடந்தது.பின்னர் ஏராளமான பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று ஸ்ரீ சங்கர ராமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.இரவு அண்ணாபிஷேகம் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் பிரதான பட்டர்கள் செல்வம், சண்முகம் செய்தார்கள்.





கருத்துக்கள்