ஆதரவற்ற குழந்தைகளுக்கான தீபாவளி கொண்டாட்டம்
ஒளி 2026 என்ற நல்லிணக்க தலைப்பின் கீழ் ஆதரவற்ற 80க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான தீபாவளி கொண்டாட்டத்தை குளோபல் நெட்ஒர்க் பார் ஈகுவாலிட்டி இந்தியா மற்றும் தி ஆனமலைஸ் குழுமம் ஆகியோரும் இணைந்து பாளையங்கோடடை பிளாரன்ஸ் காது கேளாதோர் பள்ளியில் அக்டோபர் 24, சனிக்கிழமை நடத்தினார்கள். இந்த விழாவிற்கு மரியாதைக்குரிய மான்புமிகு. செல்வன் ஜேசு ராஜா (தலைமை நீதித்துறை நடுவர், நாகர்கோவில்), ராஜா முரளி (காவல் உதவி ஆணையர், திருநெல்வேலி) ஷகிலா பானு (மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்), ராஜா (நிறுவனர், குளோபல் நெட்ஒர்க் பார் ஈகுவாலிட்டி இந்தியா), ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தி ஆனமலைஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. M.ரகுராம் அவர்களும், மேலாண்மை இயக்குநர் திருமதி. சுகன்யா ரகுராம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஆனமலைஸ் டொயோட்டா மதுரை நிறுவனத்தின் தலைவர் ஃபெரோஸ் பெர்னாண்டோ, விற்பனை பிரிவு துணை தலைவர் பேராட்சியப்பன், சேவைப்பிரிவு துணை தலைவர் செல்வ சந்திர கணேஷ், துணை பொது மேலாளர் மகேஷ், நிறுவன மேலாளர் அசோக்குமார், விற்பனை மேலாளர் எசேக்கியேல் ராஜா, சேவைப்பிரிவு மேலாளர் ஜெயக்குமார், வாடிக்கையாளர் சேவை முத்துகிருஷ்ணன், டீம் லீடர் சாம்ராஜ் சாலமோன், தங்கசுபாஷ் மார்கெட்டிங் ஆகியோரின் மேற்பார்வையில் ஆதறவற்ற குழுந்தைகள் 80க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடைகள், பட்டாசுகள், விருந்தும் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு கல்வி உதவியும், முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.குளோபல் நெட்ஒர்க் பார் ஈகுவாலிட்டி இந்தியா அமைப்பின் வழக்கறிஞர் ஸ்டெல்லா நன்றி கூறினார்.





கருத்துக்கள்