ஐ.லியோனி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தவெக பிரமுகர் புகார் மனு
திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி புகார் மனுவினை தவெக பிரமுகர் ராஜன் அனுப்பி உள்ளார்.
திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் "தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கழற்றி வைத்த செருப்பு தான் இன்று இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது" என்று பேசியுள்ளார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
இவ்வாறு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும்,தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை மறைமுகமாக விமர்சனம் செய்யும் வகையிலும் பேசியுள்ள "திண்டுக்கல் லியோனி" மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் தெரிவித்துள்ளார்.





கருத்துக்கள்