advertisement

மதுரவாயல்  இரும்புப் பொருட்களை திருடிய 3 பேர் கைது

அக். 26, 2026 6:18 முற்பகல் |

 

சென்னை மதுரவாயல் அருகே மேம்​பால கட்​டு​மானப் பணியை மேற்​கொண்டு வரும் தனியார் நிறு​வனத்​தில் விஜயகுமார் (48) என்​பவர் நிர்​வாகப் பொறுப்​பாளராகப் பணி​யாற்றி வரு​கிறார்.

இந்​நிறு​வனத்​தினர் மதுர​வாயல் ஏரிக்​கரை அருகே மேம்​பாலத் தூண் பகுதி​யில் கட்​டு​மானப் பணிக்​காக இரும்புப் பொருட்​களை வைத்​திருந்​தனர்.இந்​நிலை​யில், அக்.23-ம் தேதி மாலை இருசக்​கர வாக​னத்​தில் வந்த 3 பேர், அங்கிருந்த ரூ.25 ஆயிரம் மதிப்​பிலான இரும்​புப் பொருட்​களைத் திருடி சென்​றதாகக் கூறப்​படு​கிறது.
இது​குறித்து விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், மதுர​வாயல் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இந்த விசா​ரணை​யில், இரும்​புப் பொருட்​களைத் திருடிச் சென்​றது, திரு​வேற்​காடு, ஐயப்பா நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (25), ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்த சூர்யா (25), ஐயப்பா நகரைச் சேர்ந்த சபித்​குமார் (23) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து, 3 பேரை​யும் நேற்று முன்​தினம் கைது செய்த போலீ​ஸார் அவர்​களை சிறை​யில் அடைத்​தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement