சிவகங்கை ரவுடி சுள்ளான் மதன் கொலை வழக்கு - மேலும் 3 பேர் கைது
சிவகங்கை ரவுடி சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் மூன்று பேரை சிவகங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் என்கிற சுள்ளான் மதன் (வயது 26) கொலை வழக்கு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிவகங்கையை சேர்ந்த சந்தோஷ் (வயது 19), ஜெய மாணிக்கராஜ் (வயது 20), முத்து சூர்யா (வயது 20), மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 23), மிதுன் மாணிக்கம் (வயது 26), சதீஷ்குமார் (வயது 22) மற்றும் மானாமதுரையைச் சேர்ந்த சந்துரு (வயது 19) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
இதனையடுத்து, தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய, திருப்புவனத்தை அடுத்த மாரநாட்டைச் சேர்ந்த அதிபதி ராஜா (வயது 26), காரைக்குடியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 25), விருதுநகர் மாவட்டம் அரசகுளம் கிராமத்தை சேர்ந்த விஜய் (வயது 19) ஆகிய மூன்று பேரை சிவகங்கை நகர் காவல்துறையினர் நேற்று (அக்டோபர் 25) கைது செய்தனர்.
இதனால், ரவுடி சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இக்கொலை வழக்கு தொடர்பாக சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகள் மற்றும் புகைப்படங்களை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இதுவரை சமூக வலைதளப் பதிவுகள் தொடர்பாக, 24 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.





கருத்துக்கள்