மருத்துவமனையில் இருந்தே மக்களுடன் கலந்துரையாடிய முதல்-அமைச்சர் ஸ்டாலின்
மருத்துவமனையில் இருந்தபடியே மக்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனால், அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்-அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் மருத்துவமனையில் இருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். ஸ்ரீபெரும்புத்தூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் கலந்து கொண்ட மக்களிடம் குறைகளை கேட்டும், அவர்களுக்கு தீர்வு கிடைத்தது குறித்தும் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது பயணாளிகள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர் பேசும் பாேது"மருத்துவமனையில் இருந்தபடியே உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன். மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்" என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்