மாஞ்சோலை தேயிலைத் தோட்ட போராட்ட தொழிலாளர்கள் நினைவு தினம்
தமிழர் நீதி கட்சி தலைவர் சுபா இளவரசன் ஆணைக்கிணங்க சூலை 23 மாஞ்சோலை தேயிலைத் தோட்ட கூலி உயர்வு கேட்டு போராடி போராட்டக் களத்தில்,உயிர் நீத்த போராளிகளுக்கு நெல்லை மாவட்டச் செயலாளர் அழகு ராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் உள்ள நதிக்கரையில் வைத்து போராளிகளுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மேலிடப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் மாவட்ட செயலாளர் திருக்குவளை ராஜ்குமார் அவர்கள் கலந்து கொண்டனர் உடன் தென்மண்டல மண்டல செயலாளர் ராஜபாண்டியன், நெல்லை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு,விஜய்,தென்காசி மாவட்ட செயலாளர் ஞானராஜ், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பாலமுருகன்,பாளை ஒன்றிய செயலாளர் மாரியப்பன் , தென்காசி நகர செயலாளர் கோவிந்தன் கீழ்ப்பாட்டம் பகுதி தலைவர் லட்சுமணன், மகளிரணி பொறுப்பாளர்கள்,பெண்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
கருத்துக்கள்