தக்கலையில் ஒரே நாளில் 124 சிசிடிவி கேமராக்கள்: மாவட்ட எஸ்.பி தொடங்கி வைத்தார்
ஜூலை 23, 2025 11:05 முற்பகல் |
ஊர்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ், தக்கலை உட்கோட்டத்தில் 124 புதிய சிசிடிவி கேமராக்கள் நேற்று (22.07.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.
“ஒரு காவலர் இரண்டு சிசிடிவி” திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படும் இந்த முயற்சி, காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையிலான நெருக்கத்தை வளர்த்து, மாவட்டம் முழுவதையும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வருவதற்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த சிசிடிவி கேமராக்களை நேரடியாக காவல் நிலையத்திலிருந்தே கண்காணிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்வில் துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், காவல் ஆய்வாளர் கிறிஸ்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்