advertisement

ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மருத்துவ விழிப்புணர்வு முகாம்

ஜூலை 23, 2025 9:33 முற்பகல் |

ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் / சார்ந்தோர்கள் நலனுக்காக வரும் 26-ந் தேதி சுகாதார மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறதென  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள  செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது :ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் , அவர்களை சார்ந்தோர்களுக்கு முன்னாள் படைவீரர் நல அலுவலகம் வாயிலாக புற்றுநோய், பக்கவாதம், மனவளர்ச்சி குன்றிய சிறார்கள், கண் பார்வையற்றோர், மாற்று திறனாளிக்களுக்கான நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்களுக்கு பொது மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதனையொட்டி , ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் நலனுக்காக சுகாதார மருத்துவ விழிப்புணர்வு முகாம் 26.07.2025 அன்று மண்டபம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. முகாமில் , ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் /சார்ந்தோர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement