advertisement

அஜித்குமார் கொலை வழக்கு -  நிகிதா, சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

ஜூலை 24, 2025 10:46 முற்பகல் |

 

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு ஜூன் 27-ம் தேதி தரிசனத்துக்காக நிகிதா என்ற பெண் சென்றுள்ளார். அப்போது அவரது நகை காணாமல் போனது குறித்த புகாரில் கோவில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கென தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். அவர்கள் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இக்கொலை தொடர்பாக தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, டெல்லி சிபிஐ பிரிவு டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடம், திருப்புவனம் காவல் நிலையம், கோவில் என பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில், அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா முதல்முறையாக மதுரை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement