மருத்துவர் இராமதாஸ் பிறந்தநாள்: வாழ்த்திய எடப்பாடி பழனிச்சாமி!
பா.ம.க. நிறுவனர் தலைவர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் இன்று தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா டாக்டர். ச. இராமதாசு அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா டாக்டர். ச. இராமதாசு அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்