advertisement

முதல்வர் ஏன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை? தமிழிசை கேள்வி!

ஜூலை 26, 2025 11:36 முற்பகல் |

திமுக ஆட்சியில் 4 வருடங்களாக செய்ய முடியாததை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், 45 நாட்களுக்குள் எப்படி செய்ய முடியும்? என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். 

பாஜக முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,திமுக வீடு வீடாக சென்று பாஜக நிதி கொடுக்கவில்லை என்று சொல்கிறோம் என்கின்றனர். இன்று பாஜக அரசு 4500 கோடி ரூபாய் நிதி கொடுக்கிறது என்று திமுக வீடு வீடாக சென்று சொல்ல வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் என்று நான்கு வருடங்களாக செய்து முடியாததை 45 நாட்களுக்குள் எப்படி செய்ய முடியும்? என்ன மனுக்கள் எந்த பெட்டிக்குள் போல் தூங்குகிறது என்பது தெரியாது.

இந்தியாவிலேயே தமிழக சுகாதாரதுறை தான் முதல் இடத்தில் இருக்கிறது என்கிறீர்கள். பிறகு முதல்வர் ஏன் அங்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை? ஏன் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை. உலகத்தரம் வாய்ந்தது என்கிறீர்கள் பிறகு ஏன் முதல்வரங்கு செல்லவில்லை. இதில் உங்களுடன் ஸ்டாலின், மக்களுடன் ஸ்டாலின் என்கிறீர்கள் என்று கூறினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement