தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு இபிஎஸ் தான் தலைமை: சுதாகர் ரெட்டி பேட்டி..!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இன்று தரிசனம் செய்தார். அதன் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. மேலும் தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்து அதிகளவில் உள்ளது. 2026-இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று சட்டம் - ஒழுங்கை சரி செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியின் தலைவர், எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும்,அவரது தலைமையில்தான் 2026 தேர்தலை அதிமுக - பாஜக கூட்டணி சந்திக்கிறது என்றும் அறிவித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணத்துக்கு தமிழக மக்கள் அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். அவரது எழுச்சி பயணத்துக்கு பிரதமர் மோடியின் ஆசியும், வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்