ராணிப்பேட்டை - தந்தை கண்முன்னே கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மேல்நேத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு கல்லூரி பஸ்சில் இருந்து இறங்கி மேல்நேத்தப்பாக்கம் கூட்ரோட்டில் இருந்து தனது தந்தை உடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்து, இடது கை பகுதிகளில் வெட்டி விட்டு, மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றார்.
இதில் பலத்த காயம் அடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கலவை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கவியரசு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துக்கள்