advertisement

கோவை : கள்ளக்காதலுக்காக குழந்தையைக் கொன்ற கொடூர தாய்!

ஜூலை 26, 2025 10:17 முற்பகல் |


 
கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி, கணவருடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து, தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். கட்டட பணியில் சித்தாளாக பணியாற்றும் இவர், அதே துறையில் பணியாற்றும் வசந்த் என்ற உடன்பணியாளருடன் கடந்த சில மாதங்களாக நெருக்கமாக பழகிவந்ததாக தெரிய வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் தனது மகனுக்கு ஆடைகள் மாற்றி வீடியோக்கள் பதிவேற்றம் செய்வது வழக்கமாக இருந்த தமிழரசி, நேற்று மதியம் தனது நாலரை வயது மகனை வீடு அருகே மர்மமான முறையில் இழந்தார். தகவல் கிடைத்த உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரை கைது செய்து கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குழந்தை தொடர்ந்து அழுததால் கோபத்தில் அடித்ததாகவும், அதனால் தான் குழந்தை உயிரிழந்ததாகவும் தமிழரசி ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், கடந்த காலத்தில் சென்னை குன்றத்தூரில் அபிராமி என்ற பெண் தனது பிள்ளைகளை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement