advertisement

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு; முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

ஜூலை 26, 2025 11:14 முற்பகல் |

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கோரிக்கை மனு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதலுடன் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட உள்ளது.

இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரியலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வருகை தரும் பிரதமர் மோடியிடம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கோரிக்கை மனு அளித்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.7.2025) தலைமைச் செயலாளர் நா. முருகானந்தமிடம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு ஒப்புதல் அளித்தார்.

இந்த மனுவினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் அளிக்க உள்ளார். இந்நிகழ்வின்போது, கனிமொழி எம்.பி. மற்றும் முதல்-அமைச்சரின் செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement