சரக்கல்விளையில் தெரு நாய் தொல்லை அதிகரிப்பு
ஜூலை 26, 2025 9:18 முற்பகல் |
நாகர்கோவில் வல்லன் குமாரவிளை சரக்கல் விளை T N H P காலனியில் உள்ள வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் தெரு நாய் தொல்லைகள் அதிகம் . இதில் வசிக்கும் அரசு ஊழியர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு செல்லும்போது . ஊழியர்களை துரத்துகின்றன. தற்போது நாய் கடியால் தமிழகம் முழுவதும் ரேபிஸ் நோய் அதிகமாக காணப்பட்டு வரும் நிலையில் அரசு குடியிருப்பில் வசிக்கும் ஊழியர்கள் பயந்து பயந்து வேலைக்கு செல்கின்றனர். மேலும் குடியிருப்பு பகுதி கட்டிடத்தின் மேல் பகுதியில் முறிந்து விழுந்து இருக்கும் மரக்கிளையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்
கருத்துக்கள்