advertisement

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்-ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

ஜூலை 26, 2025 9:16 முற்பகல் |

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல் தெரிவித்துள்ளார் .

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது  :ஆண்டு தோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள் (2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள்) 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1.00 இலட்சம், ரூ.10,000/- மதிப்பிலான தங்கப் பதக்கம் , பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் , விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒவ்வொரு ஆண்டிலும் வழங்கி வருகிறது.

இது தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் , ஒரு நன்கொடையாளர் ( ரூ.10,00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) ஒரு ஆட்ட நடுவர்/நடுவர்/நீதிபதி ஆகியோர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு ஆண்டிலும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10,000/- க்கு மிகாமல் ஒரு தங்கப்பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி 2024-2025  மற்றும் 2025-2026 ஆண்டுகளுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் தலைசிறந்த விளையாட்டு வீரார்கள்/வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர்/உடற்கல்வி ஆசிரியர்/விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர்/ஒரு நிர்வாகி/ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் , ஒரு நன்கொடையாளர் /ஒரு ஆட்ட நடுவர்/நடுவர்/நீதிபதி ஆகியோரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

விருதுக்கு விண்ணபிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு கழகம்/ மாவட்ட விளையாட்டு , இளைஞர் நலன் அலுவலர் /முதன்மைக் கல்வி அலுவலர் /முதன்மை உடற்கல்வி ஆய்வர் (ஆடவர் / மகளிர் மூலமாகவும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் , ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கு அதிகமாக நன்கொடை அளித்தவர்) ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோர்கள் உரிய வழிமுறையாகவும் விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலருக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்ப படிவம் , விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் http://www.sdat.tn.gov.in, என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கலாம், அல்லது ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தலைமை அலுவலகத்திற்கு கடைசி நாளான 11.08.2025 மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைத்திட வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement