டிக் டாக்" இலக்கியா குற்றச்சாட்டு ; ஸ்டண்ட் மாஸ்டர் விளக்கம்
இலக்கியா தற்கொலை முயற்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வந்தவர் சூப்பர் சுப்பராயன். இவரின் மகனான திலீப் சுப்பராயனும் தற்போது சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர் சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஜில்லா, புலி, தெறி, வாரிசு, கோட், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை, காப்பான், தீரன், வட சென்னை போன்ற வெற்றிப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.
யூடியூபர், இன்ஸ்டா பிரபலமான இலக்கியா நேற்று தற்கொலை முயற்சி செய்துள்ளார், அதிக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இலக்கியா ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மீது குற்றம் சாட்டியுள்ளார். சில மணி நேரத்தில் தனது குற்றச்சாட்டு பதிவுகளை நீக்கிவிட்டு, 'ஆல் ஆர் பேக் நியூஸ்' என்று மாற்றியுள்ளார் இலக்கியா.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள திலிப் சுப்பராயன், தனது பெயரை குறிப்பிட்டு இலக்கியா பகிர்ந்திருந்தது பொய்யான தகவல் என குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக இதை யாரோ செய்கிறார்கள். இந்த விவகாரத்தை நான் சட்டப்படி சந்திப்பேன். இலக்கியா தற்கொலை முடிவுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட நபரே அப்பதிவை அழித்துவிட்டு, பொய்ச்செய்தி என விளக்கம் அளித்துள்ளதாகவும் திலீப் சுப்பராயன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துக்கள்