advertisement

விஜயகாந்த் நினைவிடத்தில் அழுத பிரேமலதா!

ஜூலை 25, 2025 9:16 முற்பகல் |

 

விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா படையல் வைத்து வணங்கி கண்ணீர் விட்டு அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆடி அமாவாசையை ஒட்டி விஜயகாந்த் நினைவிடத்தில், அவரது மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா படையல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தார். அப்போது, அவரது நினைவால் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு, நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரேமலதா நேற்று (ஜூலை 24) விஜயகாந்த் நினைவிடத்தில் சிறப்பு பூஜைகள் செய்து படையலிட்டு வழிபாடு செய்தார். அப்போது அவர் நினைவால், சமாதியின் மீது சாய்ந்து கண்ணீர் விட்டு அழுதார். இது அங்கிருந்த அனைவரையும் கண் கலங்கச் செய்தது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement