மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் பதவியேற்ற கமல்ஹாசன்
மாநிலங்களவை எம்.பி.யாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று பதவியேற்றார். அப்போது அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
"மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் எனும் நான், சட்டத்தால் நிறுவப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும் உறுதியளிக்கிறேன். நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும், விழுமிய முறைமையுடன் உறுதி கூறுகிறேன். வணக்கம்" எனக் கூறி மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் கமல்ஹாசன்.கமல்ஹாசனுடன் சேர்ந்து மற்ற 5 பேரும் மாநிலங்களவை எம்.பி.க்களாக இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களும் தமிழிலேயே உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கருத்துக்கள்