advertisement

ராமநாதபுரத்தில் ஜூலை 31 ல் எரிவாயு முகவர்கள் குறைதீர் கூட்டம்

ஜூலை 25, 2025 8:43 முற்பகல் |

ராமநாதபுரம் மாவட்டம் எரிவாயு முகவர்களுடன் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வரும் 31-ந்தேதி நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, இராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி,  முதுகுளத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் , கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் , எரிவாயு முகவர்களுடன் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வரும் 31.07.2025 வியாழக் கிழமை அன்று பிற்பகல் 04.00 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. கோவிந்தராஜலு தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement