சென்னையில் செப் 8 ம் தேதி மின்தடை அறிவிப்பு
சென்னையில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:சென்னையில் நாளை மறுநாள் (8.9.2025, திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
அடையாறு:ஸ்ரீனிவாசமூர்த்தி அவென்யூ, எல்பி சாலை, திருவேங்கடம் தெரு, கேபி நகர் 1வது குறுக்குத் தெரு, அண்ணா அவென்யூ, லோகநாத செட்டி கார்டன், பால்ராம் சாலை, கன்னியம்மா கார்டன், கெனால் பேங்க் சாலை, காந்திநகர் மற்றும் பிரதான சாலை, கெனால் குறுக்கு சாலை ஆகிய இடங்களில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கள்