திருவண்ணாமலையில் வேத ஆகம தேவார கலாச்சார மாநாடு செப் 13, 14 ல் நடைபெறுகிறது
திருவண்ணாமலையில் வேத ஆகம தேவார கலாச்சார மாநாடு செப் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
திருவண்ணாமலையில் சந்தைமேடு அரசு கலை கல்லுாரி அருகே செப் 13, 14 ஆகிய தேதிகளில் வேத ஆகம தேவார கலாச்சார மாநாடு நடைபெறுகிறது. இதில் செப் 13 ம் தேதி காலை 6.45 மணி அளவில் உலக நன்மைக்காக 1008 சிவாச்சாரியார்கள் ஒன்று கூடி மாபெரும் சிவபூஜை செய்கின்றனர். மதியம் 3 மணிக்கு மாபெரும் கலாச்சார ஆன்மிக ஊர்வலம் நடைபெறுகிறது. ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மற்றும் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி இயக்கம் செந்தில்குமார் அடிகளார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்வில் ஒயிலாட்ட ஊர்வலம்,கும்மியாட்ட ஊர்வலம்,மயிலாட்ட ஊர்வலம், பரதநாட்டிய கலைஞர்கள் ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் ஊர்வலமும்,மேலும் 63 நாயன்மார்கள் ஊர்வலம்,சிவனடியார்கள் ஊர்வலம்,நால்வர் அலங்கார ஊர்வலம்,108 ஓதுவார்கள் ஊர்வலம்,சமுதாய பிரதிநிதிகள் ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்வலம் நடைபெற உள்ளது.
கருத்துக்கள்