advertisement

தூத்துக்குடியில் காவலர் தின விழிப்புணர்வு பேரணி

செப். 06, 2025 11:30 முற்பகல் |

 


தூத்துக்குடியில் காவலர் தினத்தை முன்னிட்டு காவல்துறை வாகனங்களின் விழிப்புணர்வு பேரணியை எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார். 

1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் காவலர் நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று (06.09.2025) காவலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்திற்கு சென்று காவலர் தின உறுதிமொழி ஏற்றும் பின்னர் துப்பாக்கி சுடுதள வளாகத்தில் 150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்ட மரம் நடுவிழாவிற்கு தலைமை தாங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மரம் நட்டி காவலர் தினத்தை சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து காவலர் தினத்தை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பாக இருந்து 14 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 15 இருசக்கர காவல்துறை வாகனங்களின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement