advertisement

பதிவு செய்யப்படாத மனநல மையங்கள் மீது நடவடிக்கை : ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை

செப். 06, 2025 6:50 முற்பகல் |

ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத மனநல மையங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மனநல மையங்கள் :  ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை , மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறு வாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்கு ஆளானவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள், மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய மனநல நிறுவனங்கள், மையங்கள் அனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் 2017-ன் படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் , இவ்வாறு பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் பதிவு செய்ய ஒரு மாத காலத்திற்குள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தில் முதன்மை செயல் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அலுவலகத்தின் இ.மெயில் முகவரி tnsmha@gmail.com ஆகும். விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையதள முகவரி-https://tnhealth.tn.in/tngovin/dme/dme.php . நடவடிக்கை :   மனநல மையங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை மேற்காணும் இணையதள முகவரியிலோ, தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்திலோ நேரடியாகவோ தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள், நிறுவனங்கள் ஒரு மாத காலத்திற்குள் மேற்காணும் தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறினால், உரிமம் பெறாமல் செயல்படும் இத்தகைய மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement