advertisement

அதிமுகவில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 300 பேர் ராஜினாமா

செப். 06, 2025 3:12 பிற்பகல் |


அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்திருந்தார்.

இதற்கு பதிலடியாக செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகளை பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் சிலரின் கட்சி பதவியும் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் கோபி சட்டமன்ற தொகுதியில் பதவி வகித்து வரும் ஒன்றிய, நகர, கிளை, கழக, பேரூர் கழக, வார்டு செயலாளர்கள்என சுமார் 300 பேர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களுடைய கட்சி பதவியையும் ராஜினாமா செய்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம்அனுப்பியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது: அதிமுக பழைய வலிமையை பெறவேண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பயனுள்ள ஒரு ஆட்சி அமைய வேண்டும். இந்த நல்ல நோக்கம் நிறைவேற அதிமுக ஒன்றுபட வேண்டும். கட்சியிலிருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியிருந்தார். அதற்கு தாங்கள்( பொதுச்செயலாளர் )அவரை கட்சி பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களது கட்சி பதவிகளில் இருந்து விலகுகிறோம் எனவும் கட்சி ஒன்று பட்டால் பதவியில் நீடிப்போம் என்றுஅவர்கள் ஒரு படிவத்தில் கையெழுத்து போட்டு அனுப்பியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement