advertisement

திருச்செந்தூர் முருகன் கோவிலில் செப் 7 தரிசன நேரத்தில்  மாற்றம்

செப். 06, 2025 11:55 முற்பகல் |

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (7.9.2025) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மதியம் 3 மணிக்கு ராக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெற்ற பின்னர் நடை திருகாப்பிடப்படுகிறது.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு அன்றைய தினம் கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் தரிசன வரிசை மற்றும் பொது தரிசன வரிசை நுழைவு பகுதியில் மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement