ஜனநாயகன் படம் பார்த்த நடிகை திரிஷா
தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்க்க நடிகை திரிஷா, சென்னை ரோகிணி திரையரங்குக்கு வந்திருக்கிறார்.இது குறித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தணிக்கை தொடர்பான பிரச்சினைகளைத் தாண்டி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு ‘ஜனநாயகன்’ படம் வெளியாகியுள்ளதால் டைட்டில் கார்டில் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்” என வெளியானது. தமிழகத்தில் காலை 9 மணி முதல் ‘ஜனநாயகன்’ திரையிடப்பட்டு வரும் நிலையில் சுமார் 11 மணியளவில் நடிகை திரிஷா, தோழிகளுடன் திரையரங்குக்கு வருகை தந்துள்ளார். திரையரங்கில் திரிஷாவைப் பார்த்ததும், ‘ஜனநாயகன்’ படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவரிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பிய நிலையில், எதற்கும் பதிலளிக்காமல் திரிஷா திரையரங்குக்குள் சென்றுவிட்டார்.





கருத்துக்கள்