advertisement

ஆக்கிரமிப்பு, அடிப்படை வசதிகள் இல்லாத மயானம் : பொதுமக்கள் அவதி

ஜூலை 23, 2026 7:42 முற்பகல் |

பரமக்குடி கிழக்கு பகுதி மயானம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதுடன் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது .

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வன்னியகுல க்ஷத்திரிய மகா சபையின் தலைவர் இரா. மனோகரன் கோரிக்கை வைத்து வலியுறுத்தியுள்ளதாவது :  பரமக்குடி நகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் கிழக்கு பகுதி மயானம் இடம் (காக்காத்தோப்பு) ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றது. ஏற்கனவே பொதுமக்கள் கோரிக்கைக்கு இணங்க இந்த மயானத்திற்கு பிணங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் செல்ல உரப்புளி கால்வாயின் மீது நகராட்சியால் பாலம் கட்டி தரப்பட்டுள்ளது.மேலும், தண்ணீர் வசதிக்காக அடிபம்பு வசதியுடன் கூடிய ஆழ்துளை கிணறும் அமைத்து தரப்பட்டிருந்தது. தற்போது அந்த அடிபம்பு ஆழ்துளை கிணறு காணப்படவில்லை. அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.பிண வாகனங்கள் செல்ல கட்டப்பட்டுள்ள பாலம் முதல் நகராட்சி மயான இடம் முழுக்க ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் முழுமையாக அகற்றி பாலம் முதல் மயானம் வரை பிண வாகனங்கள் செல்லும் வகையில் சாலை வசதி அமைத்தும் , மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படா வண்ணம் தடுக்க மயானத்தை சுற்றி சுற்றுச் சுவர் அமைத்தும் , பிணங்களை இறுதி சடங்கு செய்து முடித்ததும் அனைவரும் குளிப்பதற்கு தேவையான தண்ணீர் வசதியும் செய்து தர வேண்டுமாய் கோரிக்கை வைத்து வலியுறுத்தியுள்ளனர். கோரிக்கை மனுவினை , தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு நகர்- ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், பரமக்குடி கோட்டாட்சியர், பரமக்குடி வட்டாட்சியர், பரமக்குடி நகர்மன்ற தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வலியுறுத்தியுள்ளனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement