advertisement

தொல்காப்பியம் முழுதும் எழுதி உலக சாதனை படைத்த மாணவிக்கு த.வெ.க பாராட்டு

ஜூலை 23, 2026 4:58 முற்பகல் |

தொல்காப்பியம் முழுவதையும் மனபாடம் செய்து, தொடர்ந்து 22 மணி நேரத்தில் எழுதி உலக சாதனை படைத்த விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி உமா மகேஸ்வரிக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேரில் சென்று வாழ்த்துகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டம், சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி உமா மகேஸ்வரி, தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் முழுவதையும் முழுமையாக மனபாடம் செய்து, 22 மணி நேரம் இடைவிடாது எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.  மாணவி உமா மகேஸ்வரியின் இந்தத் தமிழ்ச் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்றார். சாதனையைப் பாராட்டி மாணவி உமா மகேஸ்வரி, வழிகாட்டிய ஆசிரியை ஜான்சிராணி மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகியோருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, சிறப்புப் பரிசுகளை வழங்கிப் கௌரவித்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement