முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர் வீடுகளில் சோதனை
செப். 05, 2026 8:34 முற்பகல் |
தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று (சனிக்கிழமை) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், அபிராமபுரம் உள்ளிட்ட 19 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.இதுபோன்று திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என். நேரு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நான்கு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை தொடர்பான தகவல் அறிந்து தற்போது தில்லை நகர் வீட்டிற்கு கே.என். நேரு வந்துள்ளார். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட தி.மு.க.-வினர், கே.என். நேருவின் இல்லம் முன்பு குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.





கருத்துக்கள்