advertisement

கும்பகோணத்தில் உதயமாகும் ரே பை தாமரா!

செப். 09, 2026 5:10 முற்பகல் |

 


'தாமரா லீஷர் எக்ஸ்பீரியன்சஸ்' நிறுவனம், இந்தியாவின் முதல் 'நம்பிக்கை-சார்ந்த நுண்ணறிவுமிக்க விருந்தோம்பல்' பிராண்டான "ரே பை தாமரா" பிராண்டை கும்பகோணத்தில் அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டின் ஆன்மீக ஹாஸ்பிடாலிட்டி துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. ஒரு சாதாரண விடுதி அனுபவத்தை ஆன்மீகத் தலத்திற்கு ஏற்ப மாற்றுவதற்குப் பதிலாக, நவீன யாத்ரீகர்களின் தேவைகள், வழிபாட்டு முறைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விருந்தோம்பல் அனுபவத்துடன், இக்கோயில் நகரத்தில் இந்த பிராண்ட் கால்பதிக்கிறது.

இந்தத் தொடக்கம் குறித்து தாமரா லீஷர் எக்ஸ்பீரியன்ஸஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சமீர் எம்.சி கூறுகையில், “இந்தியாவின் ஆன்மீகச் சுற்றுலா வரைபடத்தில் தமிழ்நாடு ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. நூற்றாண்டுகளாக நமது ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை வடிவமைத்த நாட்டின் மிக முக்கியமான கோயில்களுக்கும், புனிதமான பாரம்பரியங்களுக்கும் தமிழ்நாடு தாயகமாகத் திகழ்கிறது. கோயில் நகரமான கும்பகோணம், அதன் பிரமாண்டமான கோயில்கள், காலம் கடந்து நிற்கும் சடங்குகள் மற்றும் துடிப்பான பாரம்பரியங்களுடன் ஆண்டு முழுவதும் பக்தர்களை ஈர்த்து, இந்த வரலாற்றுப் பெருமையின் சிறந்த வெளிப்பாடாக விளங்குகிறது. தாமரா நிறுவனத்தைப் பொறுத்தவரை, ரே பிராண்டைக் கும்பகோணத்திற்கு கொண்டு வருவது, அந்த நகரத்தின் ஆன்மீகப் பயணத்திற்கு மிகவும் இயல்பான மற்றும் சூழலுக்கு உகந்த அணுகுமுறையை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பாகும். இந்த ஹோட்டல் வெறும் தங்கும் இடமாக மட்டும் இல்லாமல், பக்தர்களின் ஆன்மீகப் பயணத்தின் ஒரு அர்த்தமுள்ள அங்கமாக மாறுவதற்காக, கும்பகோணத்தின் கலாச்சாரம், சமூகம் மற்றும் பாரம்பரியங்களோடு ஒத்துப் போகும் உண்மையான அனுபவத்தைப் பக்தர்களுக்கு வழங்குவதே எங்கள் முயற்சியாகும்” என்று தெரிவித்தார்.

இந்தியாவின் ஆன்மீகச் சுற்றுலாப் பொருளாதாரம் தனது புதிய வளர்ச்சிப் கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில் "ரே பை தாமரா" அறிமுகமாகியுள்ளது. இது நாட்டின் உள்நாட்டுப் பயணங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டுள்ளது. இன்று ஆன்மீகப் பயணம் என்பது வெறும் செல்ல வேண்டிய இடத்தை மட்டும் பொறுத்தது அல்ல; அப்பயணத்தைச் சுற்றியுள்ள முழுமையான அனுபவத்தாலேயே வரையறுக்கப்படுகிறது. பயணிகள் மேலும் அனுபவப்பூர்வமான மற்றும் கலாச்சாரத்தோடு ஒன்றிய விருந்தோம்பலை அதிகளவில் விரும்பும் சூழலில், கும்பகோணம் இந்த பிராண்டிற்கான ஒரு இயல்பான தேர்வாக உருவெடுக்கிறது. சோழர் காலத்து பல நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க கும்பகோணம், அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள், கட்டிடக்கலை மற்றும் கலைப் பாரம்பரியங்களால் தென்னிந்தியாவின் கலாச்சார வரைபடத்தில் நீண்டகாலமாக ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. நாடு முழுவதிலுமிருந்து பக்தர்களை ஈர்க்கும் மகாமகத் திருவிழாவோடு தொடர்புடைய கும்பகோணத்தின் ஆழமான ஆன்மீகப் பாரம்பரியமும், மாறிவரும் பயணிகளின் விருப்பங்களும், "ரேபை தாமரா"வின் வளர்ந்து வரும் நம்பிக்கை-சார்ந்த அறிவார்ந்த விருந்தோம்பல் மையங்களின் பட்டியலில் அதை ஒரு போற்றத்தக்க இடமாக மாற்றுகின்றன.

"ரே பிராண்டின் வளர்ச்சியை நாங்கள் திட்டமிட்டு வரும் வேளையில், இந்தியாவின் முக்கிய ஆன்மிகத் தலங்கள் முழுவதிலும் புதிய வாய்ப்புகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். மேலும், வேளாங்கண்ணி, திருப்பதி, பழனி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட வளர்ந்து வரும் புனிதத் தலங்களிலும் எங்கள் கவனத்தைச் செலுத்துகிறோம். ஒவ்வொரு ஆன்மிகத் தலத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தைப் பிரதிபலிக்கும் அதே வேளையில், ஆன்மிகப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் நேர்த்தியாக வழங்கும் ஹோட்டல்களின் பிணையத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும்," என்று 'தாமரா லீஷர் எக்ஸ்பீரியன்சஸ்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சமீர் எம்.சி. தெரிவித்தார்.

இந்தியாவின் ஆன்மிகச் சுற்றுகளில் இந்த பிராண்ட் விஸ்தரிப்பு அடைந்து வரும் சூழலில், ஒவ்வொரு புனிதத் தலத்தின் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டாடும் அதே வேளையில், பக்தர்களின் பயண அனுபவத்தை மேலும் வளப்படுத்தும் வகையில் 2030-க்குள் 25-க்கும் மேற்பட்ட நம்பகமான ஹோட்டல் பிணையத்தை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement