பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் மாவட்ட அளவிலான செபக்தக்ரா போட்டி.
கன்னியாகுமரி மாவட்ட செபக்தக்ரா கழகமும், பயோனியர் குமாரசுவாமி கல்லூரியும் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான பெண்களுக்கான செபக்தக்ரா விளையாட்டுப் போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். அணிக்கு 3 பேர் வீதம் போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக செபக்தக்ரா விளையாட்டின் புதிய விதிமுறைகள் குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.போட்டியை கல்லூரி துணை முதல்வர் முனைவர் ரெக்சின் தஷ்னேவிஸ் தொடங்கி வைத்தார். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று பரிசு பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் விஜயலெட்சுமி பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார்.நிகழ்ச்சியில் செபக்தக்ரா கழக நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்





கருத்துக்கள்