தூத்துக்குடி சைவ சமுதாய சங்கம் சார்பில் வ.உ.சி பிறந்தநாள் விழா
செப். 05, 2026 10:13 முற்பகல் |
தூத்துக்குடி கீழூர் சைவ சமுதாய சங்கம் சார்பில் சுதந்தர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழா, கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி கீழூர் சைவ சமுதாய சங்கம் சார்பில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை முன்னிட்டு, அய்யலு தெருவில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு, வ.உ.சி.யின் பேத்தி மரகத மீனாட்சி ராஜா தலைமையில் மாலை அணிவித்துச் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சைவ நெறி காந்தி, சிவஞான பிரகாச சபை தலைவர் ஜானகிராமன், திருநாவுக்கரசு உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.





கருத்துக்கள்