திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம்
செப். 09, 2026 6:43 முற்பகல் |
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. காலை 7.00 மணிக்கு நிலவிலிருந்து புறப்பட்ட பிள்ளையார் தேர், நான்கு ரதவீதிகளை வலம் வந்து காலை 7.30 மணிக்கு நிலைக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து காலை 7.35 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளினார்.தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு "அரோகரா" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.





கருத்துக்கள்