advertisement

இமானுவேல் சேகரனார் நினைவு தின முன்னேற்பாடுகள்- ராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு

செப். 09, 2026 5:02 முற்பகல் |

பரமக்குடியில் வரும் 11-ந்தேதி நடைபெறவிருக்கும் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு , வாகனம் நிறுத்துமிடம் , முன்னேற்பாடு பணிகள் நடைபெறுவதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு போக்குவரத்து கழகம் பணிமனை அருகே சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடம் அமைந்துள்ளது. அவரது நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து சமுதாய மக்கள் , அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், பொறுப்பாளர்கள் பெரும் திரளாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்துவர்.  இதனையொட்டி, அங்கு வருபவர்களது வாகனம் நிறுத்துமிடம், வாகனம் செல்லும் சாலை சீரமைக்கும் பணி உள்பட மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அப்பகுதிகளில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் , கேபிள்களை உயர்த்தி கட்டுவதற்கும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

அது சமயம்,  மாவட்ட வருவாய் அலுவலர் வ. சங்கர நாராயணன், வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷிநிகம், பரமக்குடி சார் ஆட்சியர் மரு. சு. வினோதினி பார்த்திபன், நகராட்சி ஆணையாளர் தாமரை, அனைத்து துறை உயர் அதிகாரிகள், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement