advertisement

கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

செப். 05, 2026 10:22 முற்பகல் |

 

கல்லணையில் இருந்து இன்று காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், இன்று காலை கல்லணையை வந்தடைந்தது.மேட்டூர் அணையை கடந்த 1-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் வந்து இன்று கல்லணையை அடைந்தது.

இதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. வேளாண்துறை அமைச்சர் வினோத் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைக்கிறார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement