advertisement

நெல்லை - முன்னாள் ராணுவ வீரர் நல சங்க வெள்ளி விழா

செப். 09, 2026 4:44 முற்பகல் |

நெல்லை மாவட்ட முன்னாள் ராணுவ வீரர் நல சங்கத்தின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்தியாஷ்ரம் பள்ளியில் வைத்து இன்று நடைப்பெற்றது

விழாவுக்கு சங்கத்தின் தலைவரும் முன்னாள் ராணுவ சர்ஜெண்ட் கே. செல்லப்பாண்டி தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினர்களாக  முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த் ஓய்வு பெற்ற கர்னல் ஆர்.தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தனர். விழாவில் சங்கத்தின் செயலாளர் கே.செல்லத்துரை ,விவேகானந்த வித்தியாஷ்ரம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ். திருமாறன்,நெல்லை  சந்திப்பு ஷிபா  மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம் கே எம் முகம்மது ஷாபி , சங்கத்தின் துணைத் தலைவர் ஜேசன் ,வண்ணார்பேட்டை ஷிவ்  ட்ரேடர்ஸ் துரை, பேராசிரியர் வேலுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கு தற்போதுள்ள முறையை பின்பற்ற வேண்டும், texco மூலம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் அரசு துறையில் பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்களை நிரந்தர அரசு பணியாளராக நியமிக்க வேண்டும், நெல்லை முன்னாள் ராணுவ வீரர் ஜவான் பவன் புதிய கட்டிடத்தை இந்த ஆண்டிலேயே கட்டி முடிக்க வேண்டும் கட்டி முடித்து தகுதியான முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மட்டும் வழங்கிட வேண்டும், சமூக நலத்துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை இணைந்து நவீன முதியோர் இல்லங்கள் அமைக்க அரசிடம் கோரிக்கை அனுப்புவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement