தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை கோலாகலம்
இந்துக்களின் முக்கிய விழாக்களில் நவராத்திரி விழாவும் ஒன்று. இந்த ஆண்டு நவராத்திரி விழா, கடந்த 11-ம் தேதி தொடங்கி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் ஒன்பதாவது நாளான இன்று ஆயுத பூஜை என்று அழைக்கப்படும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.
வீடுகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. தொழில், வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களை சுத்தப்படுத்தியும், அலங்கரித்தும் வழிபாடு நடத்தப்பட்டது. அனைத்து இடங்களிலும் கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தங்கள் ஊழியர்களுக்கு இனிப்புகள், பொரி, சுண்டல் வழங்கப்பட்டன.ஆயுதபூஜையை முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு தரிசனம் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை, திருச்செந்தூர் போன்ற தமிழ்நாட்டின் பெரிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.





கருத்துக்கள்