நெல்லையில் ஏதன் மாருதி நிறுவன சர்வீஸ் கிளை திறப்பு
நாகர்கோவிலை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபல ஏதன் மாருதி நிறுவனம் தனது புதிய கார் சர்வீஸ் கிளையை நெல்லையில் தொடங்கியது. பொது மக்களுக்கு தரமான வாகன பராமரிப்பு சேவைகளை வழங்கும் வகையில் நெல்லை சாராள் தக்கர் கல்லூரி சாலையில் இந்த நவீன சர்வீஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஏதன் மாருதி நிறுவனத்தின் உரிமையாளர் ராபின்சன் தலைமை தாங்கி புதிய கிளையை திறந்து வைத்தார். விழாவில் பாலாஜி கார்ஸ் நிறுவனர் அரசன் உட்பட தொழிலதிபர்கள் நிறுவனத்தின் உயர் நிர்வாகிகள் வர்த்தக பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
நவீன தொழில் நுட்ப கட்டமைப்பு மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்களுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய மையத்தில் அனைத்து விதமான சர்வீஸ் பணிகளும் வாடிக்கையாளர்களின் திருப்திக்கு ஏற்ப விரைவாக செய்து தரப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.





கருத்துக்கள்