இரவணசமுத்திரத்தில் 3 வயது சிறுமி உயிரிழப்பு –
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் இரவணசமுத்திரத்தைச் சேர்ந்த ரசூல் மைதீன் அவர்களின் 3 வயது மகள் , கடந்த 16/10/2026 முதல் காணாமல் போன நிலையில், ராமநதி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது.
இன்று (18/10/2026), முதலியார்பட்டி நகர SDPI கட்சித் தலைவர் அப்துல் அஜீஸ் தலைமையில், மாவட்ட அமைப்புப் பொதுச்செயலாளர் அப்துல் பாசித், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஷேக் தாவூத் உஸ்மானி, பொட்டல்புதூர் நகரப் பொறுப்பாளர் விஸ்வா ஹாஜா மற்றும் நகர நிர்வாகிகள் நேரில் சென்று சிறுமியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.SDPI கட்சியின் கோரிக்கைகள்:
ஆபத்தான கால்வாய் மற்றும் ஆற்றுப் பகுதியில் முறையான தூர்வாரல் பணி செய்து, தரமான பாதுகாப்புத் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.சிசிடிவி கேமரா, மின்விளக்கு மற்றும் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்கி, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். என எஸ்டிபிஐ சார்பில் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





கருத்துக்கள்